உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

தமிழ் ஈழத்தை உருவாக்கியெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களை தமிழகத்தில் வைக்க கூடாது என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது .

விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .

இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .

இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .

பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .

எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .

14 Responses to “உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ?”:

  1. //இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .//

    சட்டம் போடும் முட்டாள் பயலுகள செருப்பால் அடிச்சமதிரி இருக்கு பதிவு. அந்த நாய்களுக்கு உறைக்குமா?

  2. sakthi says:

    அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .

    நெத்தியடி

  3. நல்ல பதிவு.

    //இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும்.

    அது தான் பிரபாகரனுடைய ஆளுமை....

    முத்துக்குமரன் தீ குளித்ததற்காக தமிழகம் எங்கும் கல்லூரிகளை மூடிய அரசு தானே இது ... இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள்...

  4. இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .
    *******************
    நெத்தில சுட்ட மாதிரி இருக்கு

  5. Anonymous says:

    sariyaa sonneenga.nallaa ezhuthureengal...thodaravum..-raavan rajhkumar-jaffna

  6. அப்படியானால் உயிரோடு இருக்கின்றார் என்று அவர்களுக்கு தெரியும்

    சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் தானே உயிரோடு இருக்கின்றார் என்ற உண்மை தெரியும்

  7. ///அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .///

    நெத்தியடி உண்மையான வார்த்தைகள்.. நிறைவேற்றுவார்களா இங்கு???????

  8. நண்பா... அனைவரும் அதையே வேண்டுகிறோம்... அமைதி வேண்டும் தமிழ் மக்களுக்கு. நல்ல இடுகை நண்பா.

  9. நண்பா... அனைவரும் அதையே வேண்டுகிறோம்... அமைதி வேண்டும் தமிழ் மக்களுக்கு. நல்ல இடுகை நண்பா.

  10. பிரபா என்றால் இந்தியாவிற்க்கு பீப்பயம்..ஆனால் இப்போ ஸ்ரீலங்கா என்றால் பிரபாவிற்கு பீ போகும் :)

  11. சத்ரியன் said...

    //இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .//

    சட்டம் போடும் முட்டாள் பயலுகள செருப்பால் அடிச்சமதிரி இருக்கு பதிவு. அந்த நாய்களுக்கு உறைக்குமா?///////////////

    அவர்களுக்கு உரைத்திருந்தால் இத்தனை மக்களை நாம் பலி கொடுத்திருப்போமா நண்பரே நன்றி உங்கள் கருத்திற்கு

  12. sakthi said...

    அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .

    நெத்தியடி ////////////

    நன்றி தோழி உங்கள் கருத்திற்கு

  13. பரதேசிங்க இப்படி பண்ணி பண்ணி கோர்ட்ல தவறாம தோத்தாலும் யாரையோ சொறிய இந்தக் கேவலம். சை. சரி போடு போட்டீங்க சுரேஷ்

  14. //அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .\\

    ம்ம்ம்... மீண்டும் ஒரு 4 மணி நேர உண்ணாவிரதத்தை எதிர்பார்க்கிறேன்